கொள்ளை குற்றவாளியை 24 மணி நேரத்தில் கைது செய்த போலீசார்

பெரம்பலூரில் பூட்டியிருந்த கடையை உடைத்து கொள்ளையடித்த குற்றவாளியை 24 மணி நேரத்தில் கைது செய்த போலீசார் அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Update: 2024-02-18 07:20 GMT

முத்துசாமி

 பெரம்பலூர் நான்கு ரோடு -  புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் உள்ள பில்டிங் டாக்டர் என்ற கடையில் கணிணி மற்றும் பணம் உள்ளிட்ட பொருட்கள் திருடுபோய்விட்டதாக கடையின் உரிமையாளர் பெரம்பலூர் பாரதிதாசன் நகரைச் சேர்ந்த ராஜி மகன் ஆனந்த் என்பவர் பெரம்பலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து *மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி உத்தரவின்பேரில் பெரம்பலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் பழனிச்சாமி தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளியை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்தத் திருட்டு சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டதுபெரம்பலூர் மாவட்டம் ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன்  முத்துசாமி (50) என்பது விசாரனையில் தெரியவந்தது. இதனை அடுத்து அவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து அவரிடம் இருந்து திருடப்பட்ட கணிணி, மற்றும் ரூ.9500 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்த பெரம்பலூர் காவல் ஆய்வாளர் கருணாகரன் குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட பெரம்பலூர் காவல்துறையினரை *மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளாதேவி வெகுவாக பாரடினார்.

Tags:    

Similar News