வயல்வெளிகளை நாசம் செய்த பசு - பொதுமக்கள் புகார் !
வயல்வெளிகளை நாசம் செய்த பசுக்களை பொதுமக்கள் அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் பிடித்தனர்.
By : King 24x7 Angel
Update: 2024-04-03 05:21 GMT
திருச்சுழி அருகே கேட்பாரற்று சுற்றித்திரிந்து வயல் வெளிகளை நாசம் செய்த பசுமாடுகளை பொதுமக்களில் புகாரின் பேரில் பரளச்சி காவல் நிலைய போலீசார் விலங்குகள் மீட்பு நல காப்பக மையத்தில் ஒப்படைத்தனர். திருச்சுழி அருகே கீழ்குடி கிராமத்தில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது இங்கு மானா வாரியாக பருத்தி, மிளகாய் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில் இந்த விலை நிலங்களில் சுற்றுவட்டார பகுதி கிராமங்களைச் சேர்ந்த கேட்பாரற்று சுற்றி திரியும் மாடுகள் புகுந்து அடிக்கடி விளைநிலங்களை நாசப்படுத்தி நன்கு விளைந்த பயிர்களை அழித்து நாசம் செய்து வந்ததால் விவசாயிகள் வேறு வழி இன்றி இரவு பகலாக தங்கள் விலை நிலங்களில் காவல் காத்து வந்த நிலை ஏற்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் அதே போல அருகில் உள்ள கிராமங்களில் இருந்து வந்த நான்கு பசு மாடுகள் மற்றும் ஒரு கன்று குட்டி சேர்ந்து கீழ்குடி கிராம விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்ய துவங்கியது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் அந்த மாடுகளை பிடித்து கட்டி வைத்தனர். மேலும் இது குறித்து பரளச்சி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அடிக்கடி மாடுகள் விளைநிலங்களை நாசப்படுத்துவதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் போலீசாரிடம் வலியுறுத்தினர். மேலும் பொதுமக்கள் அளித்த புகார் அடிப்படையில் அந்த மாடுகளை விருதுநகரில் உள்ள பீட்டா அமைப்புடன் தொடர்புடைய சாய்பாபா விலங்குகள் மீட்பு நல காப்பக மையத்தில் போலீசார் ஒப்படைத்தனர் இது குறித்து போலீசாரிடம் கேட்டபோது, அடிக்கடி மாடுகள் விளை நிலங்களை நாசப்படுத்தி வந்ததாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர் மேலும் மாடுகளையும் பிடித்து வைத்திருந்தனர். மேலும் இது குறித்து பொதுமக்கள் புகார் அளித்தனர். மாடுகளை உரிமை கோரி யாரும் வரவில்லை என்பதால் விருதுநகரில் உள்ள காப்பகத்தில் மாடுகளை ஒப்படைத்துள்ளோம். காப்பகத்தில் மாடுகளை ஒப்படைத்துள்ளது இதுவே முதன்முறை. மீண்டும் இது போன்று சம்பளங்கள் நடக்காதவாறு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளோம். மேலும் யாரேனும் மாடுகளை உரிமை கோரி வந்தால் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு என்ன நடவடிக்கை உள்ளதோ அதன்படி மாடுகளை அவர்கள் மீட்டுக் கொள்ளலாம் என தெரிவித்தனர். மேலும் வேறு ஏதாவது பிரச்சனைகள் ஏற்படாத வகையில் அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.