நெல்லைக்கு கருணாநிதி சாலை என பெயர் சூட்ட தீர்மானம்
திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக ராஜாஜி கூட்டரங்கில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் கருணாநிதி சாலை என பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;
Update: 2024-03-09 08:34 GMT
நெல்லைக்கு கருணாநிதி சாலை என பெயர் சூட்ட தீர்மானம்
திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக ராஜாஜி கூட்டரங்கில் நேற்று (மார்ச் 8) மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் சரவணன் தலைமை தாங்கினார் துணை மேயர் ராஜு, ஆணையாளர் தாக்கரே ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் முருகன்குறிச்சி முதல் பாளை மத்தியசிறையை உள்ளடக்கிய குமரி சாலை வரை கருணாநிதி சாலை என பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.