ரோடு காணாம போகப்போகுது.. சீக்கிரமா ரெடி பண்ணுங்க...!
காஞ்சிபுரம் - உத்திரமேரூர் கீழ்ரோடு சாலையில் விடுபட்ட பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.
இந்நிலையில் கடந்த பருவ மழை காலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தொடர்ந்து வெள்ளம் செய்யாற்றில் தொடர்ந்து சென்றதால் காவாந்தண்டலம் செல்லும் சாலையில் 400 மீட்டர் தூரம் கரை அரிப்பு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டு புது போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலை துறை சார்பில் துண்டிக்கப்பட்ட சாலைகளில் பாறை மணல் கொண்டு நிரப்பப்பட்டு தற்காலிக சாலை அமைக்கப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும் நானுறு ஒரு மீட்டர் கரை பாறைகள் கொண்டும் , பேவர் பிளாக் கட்டுமானம் கொண்டும் கரை சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டது.
இந்நிலையில் இதைத் தாண்டி சுமார் 150 மீட்டர் தூரம் ஒப்பந்தத்தில் இல்லாததால் அப்பகுதி அப்படியே விடப்பட்டு பணிகள் நிறைவு பெற்றது. டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் நிக்ஜாம் மற்றும் வடகிழக்கு பருவ கனமழை காரணமாக விடுபட்ட பகுதிகளில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. செய்யாற்றில் பெருமளவு நீர் செல்லவில்லை என்ற நிலையில் இப்பகுதி தப்பியது. அரிப்பு சிறிது சிறிதாக மேலும் சாலையை சேதம் அடைய செய்யும் நிலை ஏற்படுத்தும் என்பதால் விரிவாக விடுபட்ட பணிகளை மீண்டும் கணக்கிட்டு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.