வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி கைது
நடுரோட்டில் ரகளை செய்து கொண்டு வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி கைது.;
By : King 24x7 Angel
Update: 2024-02-05 06:29 GMT
வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி கைது
கெங்கவல்லி :கெங்கவல்லி அருகே ஒதியத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் சாந்த குமார் (27) தனியார் பைனான்ஸ் கம்பெனியில் பணியாற்றி வரும் இவர், நேற்று முன்தினம் பணம் வசூலிப்பதற்காக புனல்வாசல் பகுதிக்கு டூவீலரில் சென்றுள்ளார். அப்போது, நடுரோட்டில் ரகளை செய்து கொண்டிருந்த குழந்தைவேல் மகன் சிவக்குமார்(39) என்பவர். கத்தியைகாட்டி பொது மக்களை மிரட் டிக் கொண்டிருந்தார். அதனை தட்டிக் கேட்ட சாந்தகுமாரை, சரமாரி தாக்கி செல் போன் மற்றும் வசூல் பணத்தை பறித்துள்ளார்.இதுகுறித்த புகாரின் பேரில், கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து நேற்று புனல்வாசல் எரிக்கரையில் பதுங்கியிருந்த சிவக்குமாரை கைது செய்தனர்.