பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் மத மறுப்பு திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்;
By : King 24x7 Website
Update: 2024-01-09 06:28 GMT
பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் மத மறுப்பு திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள வஊசி நகர் பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாதன் வயது 25 இவர் ஐடி ஊழியராக பணியாற்றி வருகிறார் .தாஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் ஆஷிகா மரியம் ஈரோடு மகளிர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.. இந்நிலையில் இவர்கள் இருவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இருவரும் வெவ்வேறு மதம் என்பதால் இருவர் வீட்டிலும் இந்த காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அடுத்து காதல் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடியினர் பாதுகாப்பு கேட்டு பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர். பள்ளிபாளையம் போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.காதலர்கள் இருவரும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால், காதல் ஜோடியை மணமகன் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர் .