குளுகுளு பானங்களை தேடி அலையும் மக்கள்
வெப்ப அலை மற்றும் கோடை வெயில் காரணமாக உடல் சோர்வை போக்கிக் கொள்ள இயற்கை உணவு பொருட்களான இளநீர், நுங்கு கம்மங்கூழ், தர்பூசணி, கரும்பு பால், பழச்சாறு ஆகியவற்றை தேடி தேடி மக்கள் சாப்பிட்டு வருகின்றனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-04 09:58 GMT
தர்பூசணி பழம்
தண்ணீர் பந்தல்
நாமக்கல் மாவட்டத்தில், இதுவரை இல்லாத வகையில், 108 டிகிரி ஃபாரன்ஹீட் அளவிற்கு கோடை வெயில் கொளுத்தி வருகிறது. மேலும் வெப்ப அலையின் தாக்கமும் அதிகரித்து உள்ளதால் பொதுமக்கள் சாலைகளில் செல்வதை பெருமளவில் குறைத்துக் கொண்டனர். வெப்ப அலை மற்றும் கோடை வெயில் காரணமாக உடல் சோர்வை போக்கிக் கொள்ள இயற்கை உணவு பொருட்களான இளநீர், நுங்கு கம்மங்கூழ், தர்பூசணி, கரும்பு பால், பழச்சாறு ஆகியவற்றை சாப்பிட்டு வருகின்றனர். இப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளில் வியாபாரம் அதிகரித்துள்ளது.