இடி,மின்னல் தாக்கி கடலில் தூக்கி வீசப்பட்ட மீனவரை தேடும் பணி தீவிரம்
தந்தை கண் முன்னே இடி,மின்னல் தாக்கி தூக்கி வீசப்பட்ட மீனவரை தேடும் பணியில் கடலோரக் காவல்படையினர் மற்றும் மீனவர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.;
Update: 2023-11-03 05:59 GMT
தஷ்வந்த்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமத்திலிருந்து மீனவர்கள் 4 பைபர் படகில் மீன் பிடிக்க சென்றனர். இன்று அதிகாலை 6 மணியவில்10 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். ஒரு பைபர் படகில் தஷ்வந்த் (20), அவரது தந்தை தமிழ்மணி, சித்தப்பா செல்வமணி ஆகிய மூவர் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென் இடி மின்னல் அடித்தது. இதில் தஷ்வந்த் கடலில் தூக்கி வீசப்பட்டார். உடனடியாக படகிலிருந்து கடலில் விழுந்தவரை தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. இதையடுத்து காணாமல் போனவரை கடலோர காவல் குழுமம் காவலர்கள், திருமுல்லைவாசல் மீனவர்களுடன் இணைந்து கடலில் தேடி வருகின்றனர்.