கதை திருடப்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு
மகாராஜா திரைப்படம் கதை திருடப்பட்டதாக திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த நாகன் என்பவர் புகார் அளித்துள்ளார்.;
Update: 2024-06-25 12:48 GMT
மகாராஜா திரைப்படம் கதை திருடப்பட்டதாக திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த நாகன் என்பவர் புகார் அளித்துள்ளார்.
தமிழகம் எங்கும் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் கதை திருடப்பட்டதாக திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த நாகன் என்ற மருதமுத்து என்பவர் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து விரைவில் சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பதாகவும் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.