புகையிலை விற்ற கடைக்கு சீல்!
அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடைகளில் விற்பனை கடைக்கு சீல்!
Update: 2024-02-14 11:50 GMT
மாத்தூர் அருகே பாலண்டபட்டியில் புகையிலைப் பொருட்கள் விற்ற கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்நிலையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததன் பெயரில் விராலிமலை வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரி கார்த்திக் தலைமையிலான அவர்கள் அப்பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது பாலான்டா பட்டியில் பெட்டிக்கடை வைத்துள்ள அதே பகுதியைச் சேர்ந்த பழனிவேல் என்பவரின் மனைவி லீலா என்பவர் அவரது பெட்டிகடையில் பதுக்கி வைத்து புகையிலை பொருட்கள் விற்பதாக தகவல் கிடைத்தது. இதை அடுத்து உணவு பாதுகாப்பாக அதிகாரிகள் மாத்தூர் காவல்துறையின் உதவியுடன் அந்த கடைக்கு சீல் வைத்தனர்.