மைக்கில் பேசியவர் மின்சாரம் பாய்ந்து மரணம்
திருநெல்வேலி அருகே கோவில் விழாவின் போது மைக்கில் பேசிக்கொண்டிருந்தவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
Update: 2024-01-14 04:57 GMT
காவல் நிலையம்
திருநெல்வேலி அருகே உள்ள தருவை அம்மன்கோயில் தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ் (47), தொழிலாளியான இவர் நேற்று இரவு தருவை பகுதியில் உள்ள பெருமாள்கோயிலில் மைக்கில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது மின்சாரம் பாய்ந்ததில் பால்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.