நெல்லையில் விஜயதாரணி கடிதம் குறித்து சபாநாயகர் பேட்டி
விஜயதாரணியின் ராஜினாமா குறித்து சபாநாயகர் அப்பாவு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.;
Update: 2024-02-26 08:01 GMT
அப்பாவு பேட்டி
நெல்லையில் நேற்று (பிப்.25) பேட்டி அளித்த சபாநாயகர் அப்பாவு பேசுகையில் விஜயதாரணி எம்எல்ஏ பாஜகவில் இணைந்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக காங்கிரஸ் தலைவர் எனக்கு ஆன்லைனில் கடிதம் அனுப்பினார்.
விஜயதாரணியும் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக கடிதத்தை ஆன்லைனில் அனுப்பினார். இருவரது கடிதங்களையும் ஆராய்ந்து எம்எல்ஏ விஜயதாரணியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டேன் என தெரிவித்தார்.