அரசுக்கு கோரிக்கை வைத்து ஆசிரியர்கள் உண்ணாவிரதம்
அரியலூர் பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு தொடக்ககல்வி ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் எராளமான ஆசிரியர்கள் பங்கேற்றன.;
By : King 24x7 Angel
Update: 2024-01-29 09:19 GMT
ஆசிரியர்கள் உண்ணாவிரதம் போராட்டம்
அரியலூர் பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு தொடக்ககல்வி ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சிபிஎஸ் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தபட்டது. மேலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்புகளை பறிக்கும் அரசாணை 243 யை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தபட்டது. மேலும் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தபடும் என தெரிவிக்கபட்டது. இதில் அச்சங்கத்தை சேர்ந்த ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.