தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு
திருச்சி சஞ்சீவி நகரில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான பணம், நகைகளை திருடி சென்றனர்.
Update: 2023-12-28 02:17 GMT
திருச்சி சஞ்சீவி நகரை சேர்ந்தவர் சங்கர் (57)இவர்தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு குடந்தை திருவிசநல்லூர் கிராமத்திற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் மர்ம நபர்கள் யாரோ வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோ கதவை உடைத்து அதிலிருந்து 12 பவுன் நகை மற்றும் 180 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ 5000 பணத்தை திருடி சென்று உள்ளனர். பிறகு ஊருக்கு திரும்பிய சங்கர் திருச்சி கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகை பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர் .திருட்டுப் போன நகை வெள்ளி பணத்தின் மதிப்பு ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரம்ஆகும்.