சிவகங்கையில் மூன்றாம் கட்ட நீச்சல் பயிற்சி துவக்கம்
சிவகங்கை மாவட்ட விளையாட்டரங்க நீச்சல் பயிற்சி மையத்தில் முன்றாம் கட்ட நீச்சல் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்ட விளையாட்டரங்க நீச்சல் பயிற்சி மையத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் மே 2 முதல் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இரண்டு கட்ட பயிற்சி நிறைவு பெற்று மூன்றாம் கட்ட நீச்சல் பயிற்சி நடைபெறுகிறது. இப்பயிற்சிக்கு 12 நாட்களுக்கு கட்டணம் ரூ.1,500 ஆகும்.
நீச்சல் கற்றுக்கொள்ளும் திட்டத்தின் கீழ் வரும் சிறுவர்கள் குறைந்தபட்ச உயரம் 4 அடி (120 செ.மீ) இருத்தல் வேண்டும். தினசரி காலை 7.30 மணி முதல் முதல் 8.30 வரை மற்றும் 8.30 முதல் முதல் 9.30 வரை, மாலை 3.30 முதல் 4.30வரை மற்றும் 4.30முதல் 5.30 வரையிலும் கற்றுக்கொடுக்கப்படும். கூடுதல்விபரங்களுக்கு 04575 299293 என்ற தொலைபேசி எண், 97865 23704 என்ற செல் எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.