மணல் கடத்தி வந்த டிராக்டர் பறிமுதல்
ஆரணி அருகே மணல் கடத்தி வந்த டிராக்டரை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.;
Update: 2024-05-27 09:42 GMT
டிராக்டர் பறிமுதல்
திருவண்ணாமலை மாவட்டம், மொழுகம்பூண்டி பகுதியில் வட்டாட்சியர் மஞ்சுளா தலைமையில் வருவாய் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்று மணலை எடுத்து வந்து கொட்டிக் கொண்டிருந்த டிராக்டரை நிறுத்தினர்.அதிகாரிகளை கண்டதும் ஓட்டுநர் தப்பி ஓடி விட்டார்.
இதனையடுத்து டிராக்டருடன் ஒரு யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து ஆரணி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.