வீட்டின் முன் நிறுத்தியிருந்த டிரை சைக்கிள் மாயம்

Update: 2023-12-18 03:59 GMT
விருதுநகர் காவல் நிலையம் 
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விருதுநகர் அல்லி தெரு பகுதியைச் சார்ந்தவர் அபுபக்கர் சித்திக் 54 வயதான இவர் ட்ரை சைக்கிள் வைத்து லோடுமேன் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த பத்தாம் தேதி வேலையை முடித்துவிட்டு இரவு 9 மணி அளவில் தனது வீட்டின் முன்பு தனது ட்ரை சைக்கிள் நிறுத்தி வைத்து விட்டு உறங்கச் சென்றதாகவும் மறுநாள் காலை வெளியே வந்து பார்த்த பொழுது வீட்டு வாசல் முன்பு நிறுத்தி வைத்திருந்த ட்ரை சைக்கிள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் பல்வேறு பகுதிகளில் தனது ட்ரை சைக்கிள் தேடியும் கிடைக்காததை அடுத்து காணாமல் போன ட்ரை சைக்கிளை கண்டுபிடித்து தர கோரி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஐந்தாயிரம் மதிப்பிலான ட்ரை சைக்கிள் திருடி சென்ற நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார்.
Tags:    

Similar News