நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க கோரிக்கை!

நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை

Update: 2024-02-28 05:07 GMT

போக்குவரத்துக் கழகம்

திருமயம்: அறந்தாங்கியில் இருந்து போசம்பட்டி, வம்பராம்பட்டி, கல்லுார் வழியாக புதுவயலுக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ்சால் சுற்றுவட்டார கிராமமக்கள் மிகவும் பயனடைந்து வந்தனர். இந்நிலையில் கரோனா பெருந்தொற்றின்போது இந்த பஸ் நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் மீண்டும் இயக் கப்படவில்லை. இதுதொடர்பாக கிராமமக்கள் சார்பில் அமைச்சர், கலெக்டர் மற்றும் போக்கு வரத்துத்துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கிராமப்புறங்களை சேர்ந்த மக்கள் சுமார் 3 கி. மீ தூரம் நடந்து சென்று பஸ் ஏற வேண்டியுள்ளது. இதனால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அலுவலர்கள் உரிய நேரத்துக்கு செல்ல முடியா மல் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே, நிறுத்தப்பட்ட டவுன் பஸ்சை மீண்டும் அதே வழித்தடத்தில் இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News