கிராம மக்கள் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்!
தமிழக அரசே நாங்கள் அடிமைகள் அல்ல என வாசகப் பதாகைகளை ஏந்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Update: 2024-03-28 15:30 GMT
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த செங்குணம் கொள்ளை மேடு கிராமத்தில் சுமார் 700 க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர் .இந்நிலையில் செங்குணம் கிராமத்திற்கு நடந்து சென்று வாக்களிக்க வேண்டிய சூழல் உள்ளதால் வாக்களிக்க சிரமமாக உள்ளது என்று கூறுகின்றனர். மேலும் பலமுறை மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட அலுவலர்களுக்கு புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் வாக்களிக்க போவதில்லை என கூறி எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் செய்து வருகின்றனர்.