மண் லாரியை சிறை பிடித்து இளைஞர்கள் போராட்டம்
மண் லாரியை சிறை பிடித்து இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
By : King 24x7 Website
Update: 2023-10-31 03:57 GMT
மண் லாரி சிறைபிடிப்பு
கச்சிராயபாளையம் அடுத்த பால்ராம்பட்டு கிராமத்தில் சோலையம்மன் கோவில் உள்ளது. இங்கு அரசு சார்பில் புதிதாக குளம் வெட்டும் பணிகள் நடந்து வருகிறது. குளத்தில் எடுக்கப்படும் மண்ணை பணத்திற்கு வெளியில் விற்பனை செய்து வருகின்றனர். மண் விற்பனையை தடுக்க கோரி பொதுமக்கள் அரசு அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.அதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் நேற்று மாலை 5:30 மணி அளவில் பால்ராம்பட்டு பஸ் நிறுத்தம் அருகே வந்த மண் லாரியை சிறைபிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்இன்ஸ்பெக்டர் ஏழுமலை ஆகியோர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனைத் தொடர்ந்து மாலை 6:00 மணி அளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.