இளைஞருக்கு 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிப்பு !
நத்தம் அருகே பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை அளித்த வழக்கில், இளைஞருக்கு 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பு அளித்தது.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள முத்துகோவில்பட்டியைச் சோ்ந்தவா் கி.காா்த்திக் (32). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 22 வயது பெண்ணை காதலித்து வந்தாா். அவரைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்தாா். பின்னா், அவரை திருமணம் செய்யாமல் ஏமாற்றினாா். இதுகுறித்து நத்தம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காா்த்திக்கை கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜோதி முன்னிலையாகி வாதிட்டாா். விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி ஜி.சரண், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகளின் கீழ் காா்த்திக்கை குற்றவாளியாக அறிவித்து, அவருக்கு 18 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.31 ஆயிரம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.