எடப்பாடி அருகே ஸ்ரீ காளியம்மனுக்கு தீர்த்தகுட ஊர்வலம்

எடப்பாடி அருகே ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ காளியம்மன் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து வந்தனர்..

Update: 2023-11-21 13:22 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டம் ஆவணிபேரூர் கீழ்முகம் கிராமம் போடிநாயக்கன்பட்டி பகுதியில் எழுந்தருளிருக்கும் அருள்மிகு ஸ்ரீ விநாயகர் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் வியாழக்கிழமை நடைபெற உள்ளது.

அதனை தொடர்ந்து இன்று கல்வடங்கம் காவிரி ஆற்றில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி, தீர்த்தம் குடம் எடுத்து வந்து சேலம் முக்கிய சாலை வழியான நைனாம்பட்டி,மசையன்தெரு காட்டூர்,வழியாக 10க்கும் மேற்பட்ட காங்கேயம் காளைகள், அணிவகுக்க பம்பை வாத்தியம்,கேரளா சண்டி மேளம் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு வந்தடைந்தனர். பின்னர் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News