மார்த்தாண்டம் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் திருட்டு

மார்த்தாண்டம் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2023-12-13 12:37 GMT
பைல் படம்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பஸ் நிலையத்திலிருந்து குழித்துறை ரயில் நிலையம் செல்லும் சாலையில் தொழிலாளர் நல உதவி ஆணையர் அலுவலகம் உள்ளது. இங்கு பல்வேறு சேவைகளுக்காக தினமும் ஏராளமானவர்கள்  வந்து செல்கின்றனர்.   

இந்த அலுவலகத்தில் சேலம் மாவட்டம் சேர்ந்த செந்தில்நாதன் (34) என்பவர் அலுவலக உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலையில் வழக்கமான முறையில்  அலுவலகத்தை திறப்பதற்காக செந்தில்நாதன் வந்தார். அலுவலக முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்றபோது, பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.        

Advertisement

உள்ளே சென்று பார்த்தபோது, அலுவலகத்தில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 6 ஆயிரம் ரூபாய்  மற்றும் ரெண்டு சிசிடிவி கேமராக்களில்  காட்சிகள் பதிவாகும் டி வி ஆர் பாக்ஸ், மோடம் போன்றவற்றை திருடி சென்றிருப்பது தெரிய வந்தது.        இது தொடர்பாக செந்தில்நாதன் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர். அரசு அலுவலகத்தில் புகுந்து திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News