சிவகாசியில் நள்ளிரவில்ஆவின் பால் பூத்தின் மேற்கூரையை உடைத்து திருட்டு

சிவகாசியில் நள்ளிரவு ஆவின் பால் பூத்தின் மேற்கூரையை உடைத்து திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2024-03-08 15:49 GMT
சிவகாசியில் நள்ளிரவு ஆவின் பால் பூத்தின் மேற்கூரையை உடைத்து திருட்டு...

விருதுநகர் மாவட்டம்,சிவகாசியில் ஆவின் பால்பூத் மேற்கூறையை பிரித்து நள்ளிரவில் ஆவின் பொருட்களை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சிவகாசியில் திருவில்லிபுத்தூர் சாலையில் இரட்டை பாலம் சந்திப்பில் ஆவின்பாலகம் உள்ளது. முன்னாள் கவுன்சிலர் சிவானந்தம் உறவினர் ராமசந்திரன் இந்த ஆவின் பாலகத்தை நடத்தி வருகின்றார். நேற்று இரவு விற்பனையை முடித்து பூட்டி சென்றுவிட்ட நிலையில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் கடையின் பணியாளர் கணேசன் திறந்துள்ளார்.

Advertisement

அப்போது ஆவின் பாலகத்தின் மேற்கூறை பிரித்து கிடந்தததையும் ஆவின் பொருட்கள் சிதறி கிடந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக போலீசிற்கு தகவல் கூறியுள்ளார்.சிவகாசி டவுன் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரித்தனர்.

ஆவின் பாலகத்தில் இருந்த பையை எடுத்துக்கொண்டு 45 நெய் பாக்கெட்,பால்கோவா, ரூ.500 திருடி சென்றது தெரியவந்தது.இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News