வாணியம்பாடியில் வீட்டில் நிறுத்திய சைக்கிள் திருட்டு

வாணியம்பாடியில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மிதிவண்டியை திருடி செல்லும் மர்ம நபர் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

Update: 2024-05-26 08:59 GMT

சைக்கிள் திருடிய மர்மநபர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி யாசின் தெருவை சேர்ந்த முகமது சலீம் இவர் தனியார் தோல் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார் இவரது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரேஞ்சர் மிதிவண்டியை திடீரென வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் மிதிவண்டியை கொள்ளையடித்து சென்றுள்ளார்.

இதன் காட்சிகள் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி பதிவாகியுள்ளது பின்னர் சிசிடிவி காட்சிகளுடன்,

வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் முகமது சலீம் புகார் அளித்தார் புகாரின் பேரில் காவல்துறையினர் மிதிவண்டியை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News