தனியார் மருத்துவமனையில் மருந்து பொருட்கள் திருட்டு

ஒரத்தநாடு தனியார் மருத்துவமனையில் நடைபெற்ற திருட்டு குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2024-04-26 01:41 GMT

திருட்டு

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு நகர் கோமுட்டி தெருவில் உள்ள 40 கடை வணிக வளாகத்தில் தனியார் சித்தா மருத்துவமனை உள்ளது. இங்கு செவ்வாய்க்கிழமை டாக்டர் சர்மிளாபேகம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார். பின்னர் அவர் மருத்துவமனையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். புதன்கிழமை காலை அங்கு வேலை செய்யும் பெண் ஊழியர் ஆஸ்பத் திறக்க வந்த போது கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச் சியடைந்த ஊழியர் இதுகுறித்து டாக்டர் சர்மிளாபேகத்திற்கு தகவல் தெரிவித்தார்.

Advertisement

இதனை தொடர்ந்து அவர் விரைந்து சென்று பார்த்தபோது, மருத்துவமனை மேஜை டிராவில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் மற்றும் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள மருந்து, மாத்திரைகள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து டாக்டர் சர்மிளா பேகம் ஒரத்தநாடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ரூ.50 ஆயிரம் மற்றும் மருந்து பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News