வேலைக்கு வந்த இடத்தில் கைவரிசை - வாலிபர் கைது

திருச்செங்கோட்டில் வேலைக்கு வந்த வீட்டில் நகை பணத்தை திருடி மாயமான வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Update: 2023-10-23 01:54 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருச்செங்கோடு நெசவாளர் காலனி சேர்ந்தவர் பிரியா (52). இவரது கணவர் மதியழகன் (58) அரசு ஊழியர் உள்ளார். இவர்களின் மகளுக்கு திருமணம் செய்வதற்காக வீட்டை புனரமைப்பு செய்து வருகின்றனர்.அதற்காக பக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் இரண்டு அறைகளை பயன்பாட்டிற்கு எடுத்துள்ளனர். ஒரு அறையில் பீரோ மற்றும் முக்கியமான சாமான்களை வைத்திருந்தார் மற்றொரு அறையில் வேலை செய்ய வந்த மூன்று பேரை தங்க வைத்திருந்தார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலையாட்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக பீரோவை திறந்த போது அதிலிருந்த 27.5 பவுன் நகை மற்றும் ரூபாய் 90 ஆயிரம் திருட்டுப் போய் இருப்பது தெரியவந்தது. மேலும் வேலைக்கு வந்தவர்களில் ஒருவர் நான்கு நாட்களுக்கு முன்பே மாயமாகி விட்டிருப்பதும் தெரியவந்தது. பல இடங்களில் தேடிப் பார்த்தும் நகை கிடைக்கவில்லை. இதையடுத்து பிரியா திருச்செங்கோடு நகர போலீசில் புகார் செய்தார். வழக்குபதிவு செய்த போலீசார் மாயமான சுரேஷ் என்பவரை தேடி வந்தனர். விசாரணையில் சுரேஷ் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் மருத்துவ சேர்ந்தவர் என்பது தெரியவந்தது போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்து விசாரணை நடத்தினார் அப்பொழுது பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைகளையும் பணத்தையும் எடுத்தது அவர்தான் என்று தெரியவந்தது அவரிடமிருந்து 27.5 சவரன் ரூ.70 ஆயிரம் ரொக்க பணம் மீட்கப்பட்டது.அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர் வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்பாபு சுரேஷை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


Tags:    

Similar News