தேனி : 4 சட்டமன்ற தொகுதிகளில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
தேனி மாவட்டத்தில் 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
By : King Editorial 24x7
Update: 2023-10-27 15:38 GMT
தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளில் வரைவு வாக்காளர் பட்டியலை 2023 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி. ஷஜீவனா வெளியிட்டார். தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டார். ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 134925 நபர்களும் பெண் வாக்காளர்கள் 138430 நபர்களும் இதரப் வாக்காளர்கள் 30 பேரும் மொத்தம் 273385 வாக்காளர் உள்ளனர். பெரியகுளம் சட்டமன்ற தொகுதிகளில் ஆண் வாக்காளர்கள் 139439 நபர்களும் பெண் வாக்காளர்கள் 144958 நபர்களும் இதரப் 112 நபர்களும் மொத்த வாக்காளர்கள் 284509 போடி நாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 134151 நபர்களும் பெண் வாக்காளர்கள் 140552 நபர்களும் இதர வாக்காளர்கள் 20 நபர்களும் மொத்த வாக்காளர்கள் 274723 கம்பம் சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர்கள் ஆண் வாக்காளர்கள் 138171 நபர்களும் பெண் வாக்காளர்கள் 144735 நபர்களும் இதரப் வாக்காளர்கள் 33 நபர்களும் மொத்த வாக்காளர்கள் 282939 தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 1115556 உள்ளனர்.