மரத்தின் மேலே இருந்து குதித்து படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வடமாநில இளைஞரால் பரபரப்பு !

திருப்பத்தூர் காமராஜர் நகர் பகுதியில் மரத்தின் மேலே இருந்துகுதித்து படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வடமாநில இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-07-13 06:15 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் காமராஜர் நகர் பகுதியில் மரத்தின் மேலே இருந்துகுதித்து படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வடமாநில இளைஞரால் பரபரப்பு திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகரத்திற்கு உட்பட்ட காமராஜர்நகர் 36 வது வார்டு பகுதியில் உள்ள சுமார் 25 அடி உயரம் கொண்ட அரச மரத்தில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த லிங்கேஸ்வரன்( 25) என்ற இளைஞர் இன்று காலை மரத்தின் மீது ஏறிக்கொண்டு மரத்திலிருந்து கீழே விழுந்து விடுவதாக கூறிக்கொண்டு மரத்தின் மீது இருந்துள்ளார்.

பின்னர் இதனைப் பார்த்து அப்பகுதிமக்கள் உடனடியாக திருப்பத்தூர் நகரகாவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நகரபோலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் மரத்தின் அருகில் மின்சார ட்ரான்ஸ்பார்ம் உள்ளதால் மின்சாரத்துறை உதவியுடன் மின் இணைப்பை துண்டித்து விட்டு வடமாநில இளைஞரை காப்பாற்றுவதற்காக கீழே பந்தல் அமைக்கப்பட்டு பின்னர் தீயணைப்பு துறையினர் மரத்தின் மீது ஏறி உள்ளனர்.

அப்போது தீயணைப்பு துறையினர் மரத்தின் மீது ஏறுவதை அறிந்த வடமாநில இளைஞர் மரத்திலிருந்து கீழே குதித்துள்ளார். இதனால் வட மாநில இளைஞருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் நகர போலீசார் வடமாநில இளைஞரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் வடமாநில இளைஞரிடம் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு காணப்பட்டது.

Tags:    

Similar News