வத்தலகுண்டு மருத்துவமனையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு!
வத்தலகுண்டு மருத்துவமனையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-11 15:13 GMT
ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் உள்ள அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை என அப்பகுதி முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. மக்கள் ஆரோக்கிய இயக்கம் சார்பில் இந்த போஸ்ட் ஒட்டப்பட்டுள்ளது.
இதில் மருத்துவ பணியாளர்களை நிர்வாகம் பலி வாங்குவதாகவும், நிரந்தரமாக மகப்பேறு செவிலியர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.