அரசுப்பேருந்து நடத்துனர்-விசிக பிரமுகர் தாக்கி கொண்டதால் பரபரப்பு

பெரம்பலூர் அருகே அரசுப்பேருந்து நடத்துனர் மற்றும் விசிக பிரமுகர் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-05-17 09:54 GMT

காயம் அடைந்த ஓட்டுநர்

அரும்பாவூரில் பணியில் இருந்த அரசு பேருந்து நடத்துனரும், விசிக பிரமுகரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூரில் இருந்து பூலாம்பாடிக்கு சென்றுக் கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று அரும்பாவூர் தண்ணி கேணி எனும் நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி இறக்கி யுள்ளது. அதே போல் அ.மேட்டூரில் இருந்து பெரம்பலூர் நோக்கி வந்த அரசுப்பேருந்தும் அதே நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி இறக்கியுள்ளது. இந்த சில நிமிடங்களில் இரண்டு பேருந்துகளின் ஓட்டு னர்களும் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது அ.மேட்டூர் பேருந்து பின்புறம் மனைவியுடன் இருசக்கரவாகனத்தில் வந்து நின்று கொண்டிருந்த விசிக பிரமுகர் ராசித்அலி செல்வதற்கு வழி இல்லாததால் பூலாம்பாடி செல்லும் பேருந்து ஓட்டுனரிடம் வழிவிடுமாறு கூறியுள்ளார்.

பயணிகள் ஏறியவுடன் பேருந்தை எடுத்துவிடுவதாக ஓட்டுனர் கூறியுள்ளார். அப்போது பேருந்து படிக்கட்டில் நின்றுகொண்டிருந்த நடத்துனர் கவர்பனையை சேர்ந்த ராஜேந்திரனுக்கும்,ராசித் அலி என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டனர்.

இதில் நடத்துனரின் கையை ராசித்அலி கடித்ததாக கூறப்படுகிறது.இதனால் அவருக்கு காயம்ஏற்பட்ட நடத்துனர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது தொடர்பாக தகவல் அறிந்த அரும்பாவூர் போலிர் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இருதரப்பும் மீதும் வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News