வன்னியர் சங்கம் சார்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு

பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதி முழுவதும் வன்னியர் ஆட்டம் என்ற தலைப்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Update: 2024-06-20 04:23 GMT

பள்ளிபாளையத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்

 நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சுற்று வட்டார பகுதி முழுவதும் வன்னியர் சங்கம் என்ற பெயரில் போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. அதில் தமிழக அரசு வன்னியர்களுக்கு10.5 சதவீதம் தனி இட ஒதுக்கீடு நிறைவேற்ற ,தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாமதம் செய்து வருகிறார். எனவே விரைவில் வன்னியர் சங்கம் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும், இனி வன்னியர் ஆட்டம் ஆரம்பம் என்ற பெயரில் நூற்றுக்கும் மேற்பட்ட சுவரொட்டிகள் நகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

மேலும் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வன்னியர்களுக்கு 10.5 இட ஒதுக்கீடு கேட்டு பாட்டாளி மக்கள் கட்சி போராட்டங்களை முன்னெடுக்கும் என தெரிவித்திருந்த நிலையில், தமிழக சட்டமன்றம் கூடவுள்ள நிலையில் 10.5 சதவீதம் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு கேட்டு நகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரானது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News