தியாகசமுத்திரம் ஸ்ரீ மஹா புற்று மாரியம்மன் ஆலய திருவிழா: நேர்த்திகடன்
பாபநாசம் அருகே தியாகசமுத்திரம் ஸ்ரீ மஹா புற்று மாரியம்மன் ஆலய திருவிழா பக்தர்கள் சக்தி கரகம் பால்குடம் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
By : King 24X7 News (B)
Update: 2024-05-06 09:17 GMT
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா தியாகசமுத்திரம் கிராமத்தில் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஸ்ரீமஹா புற்று மாரியம்மன் ஆலய திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது அது சமயம் காவேரி ஆற்றில் இருந்து திரளான பக்தர்கள் சக்தி கரகம் பால்குடம் காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவிலை வந்தடைந்து.
பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர் பின்னர் அம்மனுக்கு பால் அபிஷேகம் தீபாரதனையும் நடைபெற்றது கஞ்சி வார்த்தலும் மற்றும் அன்னதானம் நடைபெற்றது அம்மன் வீதி உலா காட்சிகள் நடைபெற்றது.
திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர் இதற்கான ஏற்பாடுகளை தியாகசமுத்திரம் நாட்டாண்மைகள் கிராமவாசிகள் மற்றும் விழா குழுவினர்கள் செய்திருந்தனர்.