திருமறையூர் ஆலயத்தில் திருமறைத் திருவிழா

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகிலுள்ள திருமறையூர் மறுரூப ஆலயத்தில் திருமறையூரில் திருமறைத் திருவிழா என்ற நிகழ்வு நடைபெற்றது.

Update: 2024-04-01 06:29 GMT

திருமறையூர் ஆலயத்தில் திருமறைத் திருவிழா

கிறிஸ்தவர்களின் புனித நூலான திருமறையை கைகளினால் எழுதுகின்ற நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை வேதாகம நண்பன் ஊழியத்தின் மூலம் வீரசுவாமிதாஸ் நடத்தினார். சபை ஊழியர் ஸ்டான்லி ஜான்சன் துரை ஜெபிக்க நிகழ்வு ஆரம்பமானது. திருமறையூர் சபை மக்கள் மற்றும் நாசரேத்தின் சுற்று வட்டாரத்திலிருந்து 300க்கும் மேற் பட்ட மக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு திருமறையை கைகளி னால் எழுதினார்கள்.

முதல் அமர் வில் வீர சுவாமிதாஸ் அவர்கள் திருமறையை கைகளினால் எப்படி எழுத வேண்டும் என்ற பயிற்சியை அளித்தார். இரண்டாம் அமர்வு திருமறையூர் சேகரத் தலைவர் ஜாண் சாமுவேல் ஜெபிக்க ஆரம்பமானது. இரண்டாம் அமர்வில் மக்கள் எல்லாரும் திருமறையை கைகளினால் எழுதினார்கள். மதிய உணவிற்கு பின்னரும் மக்கள் உற்சாகமாய் கலந்து கொண்டு திருமறையை எழுதினார்கள்.

பங்குபெற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை திருமண்டல பெருமன்ற உறுப்பி னர் ஜெயபால் தேவதாஸ், சேகர செயலாளர் ஜான்சேகர், சேகர பொருளாளர் அகஸ்டின், கமிட்டி உறுப்பினர்கள் ஜீவன், ஆசீர் துரைராஜ், ஜோயல், ஆலயப் பணியாளர் ஆபிரகாம், சபை ஊழியர் ஸ்டான்லி ஜான்சன் துரை ஆகியோர் முன்னிலையில் சேகரத் தலைவர் ஜாண் சாமுவேல் செய்திருந்தார்.

Tags:    

Similar News