திருமலை குமாரசுவாமி கோவில் பக்தர்கள் சுவாமி தரிசனம்

பண்பொழி திருமலை குமாரசுவாமி கோவில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-05-05 07:07 GMT

பண்பொழி திருமலை குமாரசுவாமி கோவில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தென்காசி மாவட்டம் பண்பொழி அருகேயுள்ள திருமலை குமாரசுவாமி கோவில் தேவார வைப்புத்தலமாகும். இதில் மேற்குத் தொடர்சி மலைத்தொடரில் உள்ள குன்றில் இக்கோவில் அமைந்துள்ளது. சுந்தரரால் பாடப்பெற்ற இத்தலத்தில், ஆரம்பத்தில் வேல் மட்டும் வைத்து வழிபட்டிருக்கின்றனர்.

மலை உச்சியிலுள்ள கோயிலின் தீர்த்த குளம் பூஞ்சுனை என அழைக்கப்படுகிறது. முருகன் தலமாக இருந்தாலும், தீர்த்தக்கரையில் சப்தகன்னிமார்கள் இருப்பது சிறப்பாக பார்க்கப்படுகிறது. இந்த கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News