திருபுவனம் கோதண்ட ராமசாமி கோயில் தேர் திருவிழா

திருபுவனத்தில் சீதாலட்சுண அனுமன் சமேத கோதண்ட ராமசாமி கோயில் தேர் விழாவில் ஹேராம், ஸ்ரீராம் என கோஷம் எழுப்பியவாறு கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாது பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Update: 2024-04-22 08:01 GMT

தேரோட்டம்

கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் சீதாலட்சுண அனுமன் சமேத கோதண்ட ராமசாமி கோயில் உள்ளது. செளராஷ்டிரா சபாவுக்கு சொந்தமான இங்கு ஆண்டுதோறும் விமர்சியாக நடைபெறும் பிரமோற்சவ விழா கடந்த 9ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நாளான நேற்று சீதா லட்சுமணன் அனுமன் சமேத ராமர் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். பின்னர் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஹே ராம் ஸ்ரீராம் என கோஷம் எழுப்பியவாறு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது வடம் பிடித்து வந்த பக்தர்களுக்கு வழிநெடுக வீதிகளில் தண்ணீர் ஊற்றியும் நீர் மோர் மற்றும் குளிர்பானங்கள் கொடுத்தும் உற்சாகப்படுத்தினர். வீதிகள் தோறும் பொதுமக்கள் அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர். தேர் நான்கு முக்கிய வீதிகளில் வலம் வந்தது. விழா ஏற்பாடுகளை சபா தலைவர் எம். பி. ஆத்மா ராமன், செயலாளர் என். கே. கோவிந்தன், பொருளாளர் எஸ். ஆர். ராம்குமார், துணைத் தலைவர் கே. எல். சுதர்சன், துணைச் செயலாளர் கே. எல். ஸ்ரீதர் மற்றும் கோயில் அறங்காவலர்கள் சபா சபா நிர்வாக குழு உறுப்பினர்கள் பிரமோற்சவ சபா கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News