திருவள்ளுவர் தின விழா மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி

ராசிபுரத்தில் ஸ்ரீ காசி விநாயகர் பண்பாட்டுப் பயிற்சி மையத்தில் சார்பில் திருவள்ளுவர் தின விழா மற்றும் திருக்குறள் பொருள் உணர்ந்து ஒப்புவித்தல் போட்டி நடந்தது.

Update: 2024-01-18 14:24 GMT

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் அருள்மிகு ஸ்ரீ காசி விநாயகர் பண்பாட்டுப் பயிற்சி மையத்தில் திருவள்ளுவர் தின விழா மற்றும் திருக்குறள் பொருள் உணர்ந்து ஒப்புவித்தல் போட்டி முதல் ஆண்டாக காசி விநாயகர் தியான மண்டபத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1 ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ மாணவிகள் திருக்குறள் பொருள் உணர்ந்து ஓப்பு வித்தல் போட்டியில் கலந்து கொண்டனர். இதில் அதிகப்படியான திருக்குறள்களை மனப்பாடமாக பொருள் உணர்ந்து சொல்லும் மாணவ, மாணவியர்களுக்கு முதல் பரிசு ரூ.5000.00, இரண்டாம் பரிசு ரூ.3000. மூன்றாம் பரிசு ரூ.2000. மற்றும் நான்காம் பரிசு ரூ.1000.00 வழங்கப்பட்டது. இதில் ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை மாணவர்களுக்கு நான்கு பரிசுகளும், ஆறு முதல் எட்டு வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு நான்கு பரிசுகளும், 9 ஆம் வகுப்பு மற்றும் 10 வகுப்பு வரை மாணவர்களுக்கு நான்கு பரிசுகளும், 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நான்கு பரிசுகளும் மொத்தம் 16 பரிசுகள் வழங்கப்பட்டது.

இவ்விழாவினை துணைத் தலைவர் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம், பேராளர் வட அமெரிக்க தமிழ் சங்கப் பேரவை மேலாளர், தகவல் தொழில்நுட்பத் துறை, வணிகவியல் துறை அமெரிக்க நடுவண் அரசை சார்ந்தவர் தமிழ்த்திரு. கொழந்தவேல் இராமசாமி அவர்கள் காணொளி மூலம் துவக்கி வைத்தார். மேலும் இவ் விழாவிற்கு அருள்நிதி உழவன் மா.தங்கவேலு ஐயா உப தலைவர், உலக சமுதாய சேவா சங்கம், ஆழியார் தலைமை தாங்கவும் அருட்செல்வர் கை. கந்தசாமி தலைவர், அருள்மிகு காசி விநாயகர் இயற்கை நல்வாழ்வு மையம், துணை தலைவர் உலக சமுதாய சேவா சங்கம், சேலம் மண்டலம் அவர்கள் வரவேற்றிடவும் முனைவர். பி சக்திவேல், முனைவர். சு. உமாமகேஸ்வரி, முனைவர் சு.குமரன். தலைமை ஆசிரியர் மாணிக்கம் மற்றும் நடுவர்கள்களாக ஆசிரியர்கள் க.மனோகரன், திருமதி. காந்திமதி, சதீஷ்குமார், திருமதி. பா.சிவகாமி போன்றோர் கலந்து கொண்டு முதல் நான்கு இடங்களை தேர்வு செய்தனர்.

மேலும் விழாவிற்கு பரிசுகளை வழங்கி சிறப்புரை செய்த முனைவர் மு.ஆ.உதயக்குமார் முன்னாள் மாவட்டக் கல்வி அலுவலர் நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டம் கலந்து கொண்டு வெற்றி பெற்ற குழந்தைகள் அனைவருக்கும் பரிசுகளை வழங்கினார். விழா சிறப்பு உரையாற்றினார். இறுதியில் செ. பாலசுப்ரமணியம் துணைத் தலைவர் அருள்மிகு காசி விநாயகர் அறக்கட்டளை அவர்கள் நன்றியுரை ஆற்றிய பின்னர் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. .

Tags:    

Similar News