மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் சிறப்பு வழக்காடு மன்றம்
திருவண்ணாமலை மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் திருவண்ணாமலை பூமாலை வணிக வளா கத்தில் நடைபெற்ற தீபத் திருவிழா மகளிர் சுய உதவிக் குழு உற்பத்தி பொருட்கள் விற்பனைக் கண்காட்சியில் பட்டிமன்ற நடுவர் பாவலர் வேலாயுதம் தலைமை யில் சிறப்பு வழக்காடு மன்றம் நடைபெற்றது. "மகளிர் முன்னேற்றத்திற்கு நாடும், வீடும் பெரும் தடையாக உள்ளது" என்று ஆசிரியர் கவிஞர் முத்தமிழன் சையத் அஜ்மல் தஹசீன் வழக்கினைத் தொடுக்க, பேச்சாளர் அனு வழக்கினை மறுத்துப் பேசினார். இந்நிகழ்வில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட திட்ட இயக்குநர்,இணை இயக்குநர் சையத் சுலைமான், உதவித் திட்ட அலுவலர்கள் ஜான்சன், ரவி எல்லப்பன், ராஜிவ்காந்தி, மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்க மேலாளர் சிவகுமார், அனைத்து வட்டார இயக்க மேலாளர்கள் (வாழ்வாதாரம்), அலுவலக பணியாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.