திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா!

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு விரதம் இருந்து முளைப்பாரி போட்ட பெண்கள் இன்று காட்டு மாரியம்மன் கோவிலில் இருந்து 1000க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கும்மியடித்து ஆடி பாடி ஊர்வலமாக வந்தனர்.

Update: 2024-03-20 05:41 GMT

திருவிழா

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு விரதம் இருந்து முளைப்பாரி போட்ட பெண்கள் இன்று காட்டு மாரியம்மன் கோவிலில் இருந்து 1000க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கும்மியடித்து ஆடி பாடி ஊர்வலமாக வந்தனர். மேலும் ஊர்வலத்தில் தாரை தப்பட்டைகள் அடிப்பதற்கு ஏற்றார் போல் இளைஞர்களுக்கு ஈடு கொடுத்து இளம் பெண்களும் குத்தாட்டம் ஆடியது ஊர்வலத்தில் முளைப்பாரி எடுத்த பெண்கள் மற்றும் பொதுமக்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. புதுக்கோட்டையில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்செரிதல் விழா கடந்த ஒரு வாரமாக நடைபெற்றது புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து பூச்செரிதல் விழா மற்றும் தேர் திருவிழா காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் வந்து சாமி தரிசனம் மேற்கொண்டனர் இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி முக்கிய திருவிழாவான தேர்தல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் பூசாரித்தல் விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை திருவப்பூர் மற்றும் அப்பகுதியை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் இருந்து பொதுமக்கள் தேர் திருவிழாவிற்கு ஒரு வாரத்திற்கு முன்பு விரதம் இருந்து தங்கள் பகுதியில் உள்ள கோவில்கள் மட்டும் வீடுகளில் முளைப்பாரி வைத்து வழிபட்டு வருவது வழக்கம் மேலும் தேர் திருவிழா முடிந்த பிறகு ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் தங்கள் பகுதியில் உள்ள கோவில்கள் மட்டும் வீடுகளில் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை இன்று புதுக்கோட்டை காட்டு மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு வந்து ஒன்றாக வைத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கும்மியடித்து வழிபட்டு பின்னர் காட்டு மாரியம்மன் கோவிலில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக புதுக்கோட்டை பெரிய கோவில் அருகே உள்ள குளத்தில் முளைப்பாரிகளை பெண்கள் கரைத்து வழிபட்டனர் மேலும் இந்த முளைப்பாரி ஊர்வலத்தில் தாரை தப்பட்டைகள் இசைக்கப்பட்டதற்கு ஏற்றவாறு இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களும் இளைஞர்களுக்கு ஈடு கொடுத்து குத்தாட்டம் ஆடி மகிழ்ந்தனர்.
Tags:    

Similar News