திருவப்பூர் கோயில் உண்டியல் திறப்பு பக்தர்கள் ரூ.12 லட்சம் காணிக்கை

திருவப்பூர் கோயில் உண்டியல் திறப்பு பக்தர்கள் ரூ.12 லட்சம் காணிக்கை இருந்தது.

Update: 2024-04-04 16:39 GMT

காணிக்கை எண்ணும் மாணவர்கள்

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் மாசி பெருந்திருவிழா கடந்த மாதம் நடந்தது. திருவிழாவையொட்டி நடந்த பூச்சொரிதல் மற்றும் தேர்த்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவிழா முடிவடைந்த நிலையில், கோயிலில் இருந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை கணக்கிடப்பட்டது. இந்து சமய அறநிலைய துறை உதவிஆணையர் கவிதா தலைமையில் கோயில் செயல் அலுவலர் முத்துராமன், ஆய் வாளர் திவ்யபாரதி, மேற்பார்வையாளர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் கோயில் பணியாளர்கள்,

தன்னார்வலர்கள் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் ரொக்க மாக 12 லட்சத்து 8 ஆயிரத்து 158 ரொக்கமும், 51 கிராம் 300 மில்லி தங்கம், 948 கிராம் 700 மில்லி வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

Tags:    

Similar News