கோவில்பட்டி சிந்தாமணி விநாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜை
கோவில்பட்டி சிந்தாமணி நகர் விநாயகர் கோவிலில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது.
By : King 24X7 News (B)
Update: 2024-05-23 14:44 GMT
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சிந்தாமணி நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் திருக்கோவிலில் நடந்த 8ம் ஆண்டு வருஷாபிஷேக விழாவின் 8ம் நாள் நிகழ்வாக திருவிளக்கு பூஜை நடந்தது. முன்னதாக விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை உள்பட விசேஷ பூஜைகள் நடந்தது.
இதில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் விளக்கு பூஜையில் கலந்து கொண்டு விநாயகரை வழிபாடு செய்தனர்,பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் கமிட்டி தலைவர் பால்ராஜ் தலைமையில் உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.