புதிய வடிக்கால் பணிகள் - மேயர் ஆய்வு

தூத்துக்குடி மாநகரில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைக்காக புதிய வடிகால் பணிகள் நடைபெற்று வருவதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2024-01-13 02:04 GMT

புதிய வடிகால் பணிகளை மேயர் ஆய்வு செய்தார்

தூத்துக்குடி மாநகரில் பக்கிள் ஓடை மடத்தூர் முதல் திரேஸ்புரம் முகத்துவாரம் வரை மாநகர பகுதிகள் வழியாக சென்று கொண்டிருக்கிறது. தூத்துக்குடி மாநகரில் லசால் பள்ளி எதிர்புறம் முதல் சவேரியானா வரை உள்ள வடிகால், ரயில்வே ஸ்டேஷன் முதல் கரிகளம் காலனி வரை உள்ள வடிகால்கள் அகலப்படுத்தப்பட்டுள்ளது. புதியதாக முத்து நகர் பீச், ஸ்டேட் பேங்க் முன்பு, பெல் ஹோட்டல் முன்பு, எட்டையாபுரம் ரோடு சுசீ பல்க் முதல் கடற்கரை வரை, அன்னம்மாள் கல்லூரி அருகில் உள்ள சத்யா நகர், திருவிக நகர் முதல் நான்கு வழிச் சாலை வரை, ரமேஷ் பிளவர்ஸ் முதல் டோல் கேட் வரை புதியதாக வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

மேலும், தற்பொழுது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறித்தலின்படி புறநகர் பகுதியில் உள்ள நீரை தடுப்பதற்கும், வெளியேற்றுவதற்கும் சங்கரப்பேரி விலக்கு முதல் நீலா சீ புட்ஸ் ஓடை வரை புதிய வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த பணிகளினால் பண்டாரம்பட்டி, கங்கா பரமேஸ்வரி காலனி, ஆதிபராசக்தி நகர், மச்சாது நகர் போன்ற பகுதிகளில் மழைநீர் தேங்காது என்று கூறியுள்ளார்.

Tags:    

Similar News