வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

தூத்துக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசா் தேடி வருகின்றனர். 

Update: 2024-03-15 04:12 GMT

பைல் படம் 

தூத்துக்குடி ஓம்சக்திநகரை சேர்ந்தவர் பால்ராஜ் (56). லாரி டிரைவரான இவர் கடந்த 9-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள தனது மகன் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்று விட்டார். பின்னர் நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.  இதனால் அதிர்ச்சி அடைந்த பால்ராஜ் வீட்டின் உள்ளே சென்று பார்த்து உள்ளார். அப்போது பீரோவில் இருந்த 6 பவுன் தங்க நகை திருடு போயிருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News