சிறப்பு இளஞ்சிறார் காவல் பிரிவு உறுப்பினராக சங்கர் நியமனம்

தூத்துக்குடி மாவட்ட சிறப்பு இளஞ்சிறார் காவல் பிரிவு உறுப்பினராக எம்பவர் இந்தியா கௌரவ செயலாளர் ஆ.சங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2024-03-06 11:07 GMT

சங்கர் 

இளைஞர் நீதி பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம் 2015 பிரிவு 107 ன் படி அமைக்கப்பட்டுள்ள குழுவில் தூத்துக்குடி மாவட்ட சிறப்பு இளஞ்சிறார் காவல் பிரிவு உறுப்பினராக எம்பவர் இந்தியா கௌரவ செயலாளர் ஆ.சங்கர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினராக பணியாற்றும் எம்பவர் இந்தியா அமைப்பின் கௌரவ செயலாளர் ஆ. சங்கர் சர்வதேச அளவில் நுரையீரல் நோய் பவுண்டேஷனின் தலைவராகவும், தேசிய அளவில் தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பின் துணைத்தலைவராகவும், இந்திய நுகர்வோர் உரிமை அமைப்பின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகின்றார்.   கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய பொறுப்புத் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

மேலும் சமூக சேவை தொடர்பாக இங்கிலாந்து, அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா, பிரான்ஸ், ஸ்பெயின், மலேசியா, இலங்கை, தாய்லாந்து, கென்யா, சிங்கப்பூர், துபாய், அபுதாபி, தோகா, ஷார்ஜா மற்றும் நேபாள் ஆகிய நாடுகளில் நடைபெற்ற சர்வதேச மாநாடுகளில்; இவர் பங்கேற்றுள்ளார்.

Tags:    

Similar News