கூழாங்கற்களை விற்பனைக்காக பதுக்கியவர்கள் கைது
உளுந்துார்பேட்டை அருகே அரசு புறம்போக்கு இடத்தில் கூழாங்கற்கள் எடுத்து சலித்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரை கைது செய்தனர்.;
Update: 2024-03-21 07:20 GMT
கைது
உளுந்துார்பேட்டை தாலுகா பச்சைவெளி பகுதியில் அரசு புறம்போக்கு இடத்தில் கூழாங்கற்கள் எடுத்து சலித்து விற்பனைக்காக வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் உளுந்துார்பேட்டை சப்- இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் பன்னீர்செல்வம் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு கூழாங்கற்கள் சலித்துக் கொண்டிருந்த உளுந்துார்பேட்டை தாலுகா பச்சைவெளி பகுதியைச் சேர்ந்த முனியன் 36, கனகராஜ், ஏழுமலை,கடலுார் மாவட்டம் விருத்தாச்சலம் தாலுகா கொட்டார குப்பம் பகுதியைச் சேர்ந்த தனவேல் 45, விருத்தாசலம் தாலுகா பூண்டியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த பழனிவேல், சிவக்குமார் ஆகிய 6 பேர் மீது வழக்குப் பதிந்து முனியன், தனவேல் ஆகிய இருவரை கைது செய்தனர்.