ரேஷன் அரிசி கடத்தல் : 3 பேர் கைது, 1 டன் அரிசி பறிமுதல்

இண்டூர் அருகே மாமரத்துக்கொட்டாய் பகுதியில் ரேஷன் அரிசி கடத்திய அரிசி ஆலை உரிமையாளர் உட்பட 3 பேரை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் கைது செய்து 1.100 டன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

Update: 2024-04-28 02:58 GMT

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவின் பேரில், எஸ்.பி., சந்திரசேகரன் மேற்பார்வையில், சேலம் சரக டி.எஸ்.பி., விஜய்குமார் தலைமையில், தர்மபுரி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை எஸ்.ஐ., கிருஷ்ணவேணி மற்றும் போலீசார் இண்டூர் அடுத்த மாமரத்துக் கொட்டாய் அருகில், ரேசன் அரிசி கடத்தல் சம்மந்தமாக, ரோந்து சென்றனர்.

அப்போது,மஹிந்திரா பிக்கப் வாகத்தில் மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரித்தனர். இதில், மேல்குள்ளம்பட்டியை சேர்ந்த கோவிந்தசாமி,கூரம்பட்டியை சேர்ந்த முருகன், என்பதும் வாகனத்தில் தலா, 50 கிலோ எடைகொண்ட 22 மூட்டைகளில், 1,100 கிலோ ரேசன் அரிசியை ஏற்றிக் கொண்டிருந்தது தெரியவந்தது. மேலும், விசாரணையில், ரேசன் அரிசியை தர்மபுரி அடுத்த, நல்லாம்பட்டியில் உள்ள நவீன அரிசி ஆலை உரிமையாளர் வடிவேல் என்பவருக்கு விற்பனை செய்வதற்காக எடுத்து சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து, அரிசி ஆலை உரிமையாளர் வடிவேல் மற்றும் கோவிந்தசாமி, முருகன் ஆகியோரை கைது செய்து, நீதிபதி முன், ஆஜர் செய்து தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News