அனுமதியின்றி மணல் கடத்திய மூன்று பேர் கைது

அரூர் அருகே கோரையாற்றில் அனுமதியின்றி மணல் கடத்திய மூன்று நபர்களை கோட்டப்பட்டி காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-05-10 03:21 GMT

மணல் கடத்தல்

தர்மபுரி மாவட்டம், அரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சிட்லிங் கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திரன், அவருடைய உதவியாளருடன் மலைதாங்கி கிராமத்திற்கு வாரிசு சான்றிதழ் விசாரணை தொடர்பாக சென்று கொண்டிருந்தார். அப்போது கோரையாற்றில் சிலர் பொக்லைன் எந்திரம் மூலம் அனுமதியின்றி மணல் அள்ளி கொண்டிருந்தனர். அவர்களை விசாரித்த போது மலைதாங்கி கிராமத்தை சேர்ந்த நடராஜ் என்ற நிக்கல்சன், அவருடைய மகன் நவீன், ஏகே தண்டாவை சேர்ந்த சுரேஷ், ராஜேஷ் ஆகியோர் பதிவெண் இல்லாத டிராக்டர் மற்றும் டிரைலர் மற்றும் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் மணல் அள்ளி கொண்டிருந்தனர்.

நடராஜ் என்பவரின் வீட்டின் அருகிலும் 1.5 யூனிட் மணல் கொட்டப்பட்டிருந்தது.இந்த மணல் கடத்தல் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் கோட்டப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக நடராஜ், சுரேஷ், ராஜேஷ் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான நவீனை தேடி வருகின்றனர். அவர்களிடம் இருந்து டிராக்டர், டிரைலர், பொக்லைன் எந்திரம், 1 யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News