அரசுப்பள்ளியில் முப்பெரும் விழா

நாகை மாவட்டம் திருமருகல் அருகே அரசுப்பள்ளியில் நடந்த முப்பெரும் விழா மாவட்ட கலெக்டர் பங்கேற்றார்.;

Update: 2024-02-02 10:45 GMT

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி புறாக்கிராமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா, இலக்கிய மன்ற ஆண்டு விழா,முன்னாள் மாணவர்கள் சங்கமிக்கும் முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது.

விழாவிற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி தலைமை தாங்கினார்.மாவட்ட கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன்,பள்ளி மேலாண்மை குழு தலைவர் தமிழ்ச்செல்வி,பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தமிமுல் அன்சாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் மாணிக்கவாசகம் வரவேற்றார்.

Advertisement

உதவி தலைமை ஆசிரியர் சிவசங்கரி ஆண்டறிக்கை வாசித்தார்.இதில் நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் சரவணன், பாலசுப்ரமணியன் மற்றும் முன்னாள் மாணவர்கள்,முன்னாள் ஆசிரியர்கள், பள்ளி மாணவ மாணவியர்கள்,ஆசிரியர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.முடிவில் உதவி தலைமை ஆசிரியர் சண்முகநாதன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News