திருட்டுத்தனமாக மது விற்ற மூன்று பேர் கைது  !

திருட்டுத்தனமாக மது விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

Update: 2024-04-18 04:47 GMT

கைது

நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி  மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அரசு  அறிவித்தது. குமரி மாவட்டத்தில் நேற்று அனைத்தும் மது கடைகளும் மூடப்பட்டன.

இது தொடர்ந்து  திருட்டுத்தனமாக மது விற்பனையை  தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் நாகர்கோவில் கோட்டார் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சத்திய சோபன் தலைமையிலான போலீசார் ரயிலடி திடல் பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தார். விசாரணையில் அவர் அதே போதையை சேர்ந்த அருள் (34) என்பதும் அவர் மது விற்றது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து ஐந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் காட்டுவிளை பணி  முத்துவேல் (46) என்பவரிடமிருந்து 10 பாட்டில்களும், புத்தேரியை சேர்ந்த நாகராஜன் (36) என்பவரிடமிருந்து 8 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.

Tags:    

Similar News