மூன்று சக்கர வாகன வாக்காளர் விழிப்புணர்வு பேரணி !
வாக்கு விற்பனைக்கு அல்ல” என்ற தலைப்பில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் இணைந்து ஆட்சியர் அலுவலகம் முதல் நாகர்கோவில் நாகராஜா கோவில் திடல் வரை மூன்று சக்கர வாகன பேரணியை நடத்தி வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
By : King 24x7 Angel
Update: 2024-04-02 12:38 GMT
கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுவதையொட்டி 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.அதன் ஒரு பகுதியாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த மூன்று சக்கர வாகன பேரணியை ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.எனது வாக்கு விற்பனைக்கு அல்ல” என்ற தலைப்பில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் இணைந்து ஆட்சியர் அலுவலகம் முதல் நாகர்கோவில் நாகராஜா கோவில் திடல் வரை மூன்று சக்கர வாகன பேரணியை நடத்தி வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இப்பேரணியில் 100-க்கு மேற்பட்ட வாகனங்களுடன் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இணை இயக்குநர் மற்றும் திட்ட இயக்குநர் பீபீ ஜான், மாவட்ட மாற்று திறனாளி நல அலுவலர் சிவசங்கர், உதவி திட்ட அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.